தலைமைச் செயலகத்தில் பரபரப்பு: விரிசல்? பதறி அடித்து வெளியே ஓடி வந்த ஊழியர்கள்! நடந்தது என்ன?! - Seithipunal
Seithipunal


சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் விரிசல் என்று தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தகவலை எடுத்து நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் பணிபுரிந்து வந்த அரசு ஊழியர்கள் சுமார் 3,000 பேர் பதற்றம் அடைந்தனர்.

மேலும் பலர் கட்டிடத்தை விட்டு வெளியேறி தலைமைச் செயலாக வளாகத்தில் குவிந்தனர்.

பின்னர் போலீசார் கட்டிடத்தில் விரிசல் எதுவும் இல்லை, தரை தளத்தில் ஒட்டப்பட்டுள்ள டைல்ஸில் காற்று புகுந்த காரணத்தால் உடைந்து உள்ளதாகவும், அதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், ஊழியர்கள் அனைவரும் உள்ளே சென்று தங்களது பணியை தொடர வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இதனை தொடர்ந்து ஊழியர்கள் தங்களது பணியை தொடர கட்டிடத்தின் உள்ளே செல்லத் தொடங்கியுள்ளனர்.

தொடர்ந்து விரைந்து வந்த அமைச்சர் வேலு தலைமைச் செயலாக கட்டிடத்தை ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தெரிவிக்கையில் தலைமைச் செயலாக கட்டிடம் வலிமையாக உள்ளது. டைல்ஸ் மட்டுமே சேதம் அடைந்துள்ளது கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இந்த டைல்ஸ் ஒட்டப்பட்டது. சேதமடைந்த டைல்ஸ்களை மாற்றும் பணி தற்போது நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN secretary building issue


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->