விடுமுறை நாட்களில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் விடுப்பு எடுக்க கூடாது - போக்குவரத்துக்கழகம் உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


விடுமுறை நாட்களில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் விடுப்பு எடுக்க கூடாது - போக்குவரத்துக்கழகம் உத்தரவு..!!

தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். 

அதிலும் குறிப்பாக வார விடுமுறை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் போக்குவரத்து கழகம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும். இதற்கு காரணம், மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வது தான்.

அதுமட்டுமல்லாமல், திருமணம் முகூர்த்தம், பண்டிகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட சற்று கூடுதலாக இருக்கும். அந்த நேரத்தில்,பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிக்கு வருவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் போக்குவரத்து துறை பொதுமக்களின் நலன் கருதி அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களும் பண்டிகை நாட்களில் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 

அது மட்டுமல்லாமல், விழா காலங்கள், விடுமுறை நேரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓட்டுநர் மற்றும் நடத்தினர்களிடம் கண்ட்ரோல் சார்ட்டில் கையொப்பம் பெற்று பேருந்துகளை இயக்க வலியுறுத்தியுள்ளது . 

அவ்வாறு பேருந்துகள் இயக்கப்படுவதை அனைத்து மண்டல மேலாளர்களும் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN transport department order to drivers and conductors must work on holidays


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->