#BREAKING | உயர்ந்தது தமிழகத்தில் மின்சார கட்டணம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் 4.83% மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட இந்த மின் கட்டணம் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்ததாகவும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அந்த அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தின் விவரங்கள் பின்வருமாறு:

வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் 0 முதல் 400 யூனிட் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ₹4.60ல் இருந்து 4.80ஆக உயர்வு.

401 முதல் 500 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹6.15ல் இருந்து ₹6.45ஆக உயர்வு.

501 முதல் 600 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹8.15ல் இருந்து ₹8.55ஆக உயர்வு.

601 முதல் 800 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹9.20ல் இருந்து ₹9.65ஆக உயர்வு.

801 முதல் 1000 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹10.20ல் இருந்து ₹10.70ஆக உயர்வு.

1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இனி ₹11.80 வசூலிக்கப்படும்.

இந்த மின்கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல்அமலுக்கு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNEB electricity bill hike July 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->