தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடுகள் பாதுகாக்க புதிய திட்டம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடு நீலகிரி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கான உரிய சிறப்புகளைக் கொண்டது. வரையாடு இனத்தை பாதுகாப்பதற்காக நீலகிரி வரையாடு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 7ம் தேதி வரையாடு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதன் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அழிவின் விளிம்பில் இருக்கும் வரையாடு இனத்தை பாதுகாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்த ரூ.25.14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாவஹு வெளியிட்டார்.

இதுகுறித்து பேசிய அவர் "நீலகிரி வரையாடு அழிந்து வரும் இனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. வரையாடுகள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள், காட்டு தீ, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற காரணங்களால் வரையாடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

வரையாடுகள் தற்பொழுது தமிழக மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் சிதறி வாழ்கின்றன. நீலகிரி வரையாடத் திட்டத்தின் மூலம் உண்மையான வாழ்விடங்கள் மீட்கப்படும். வரையாடுகளுக்கான உரிய வாழ்விடங்களை உருவாக்கி அதன் இனத்தை மீண்டும் மீட்டு  எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tngovt Announced new project for protect mountain sheep


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->