அரசு பள்ளி மாணவர்களுக்கும் ரூ.1,000.!! அமைச்சரின் சூப்பர் அறிவிப்பு.!!
TNGovt announced rs1000 for govt school students
தமிழ்நாடு பட்ஜெட் 2024-2025 நிதியாண்டிற்கான நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது அவர் அரசு பள்ளி மாணவர்களுக்கு சில திட்டங்களை யும் அறிவித்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு. அதில் முதலாவதாக "தமிழ் புதல்வன்" என்ற பெயரில் திட்டம் தொடங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் பாட புத்தகம், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்கள் கல்வியை மெருகேற்ற உதவிடும் வகையில் மாதந்தோறும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை தமிழக அரசுக்கு ரூ.360 கோடியில் செயல்படுத்தும் என அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே மாணவிகளுக்கு வழங்கிய திட்டத்தைப் போலவே இத்திட்டமும் அமல்படுத்தப்படும், இத்திரைப்படத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு நிதி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்துள்ளார்.
English Summary
TNGovt announced rs1000 for govt school students