ஆளுநர் வைத்த செக்! TNPSC தலைவர் பதவி கிடைக்குமா? ராஜ்பவனுக்கு பறந்த முக்கிய கடிதம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு காவல்துறையின் டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்ற நிலையில் அவரை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிப்பது தொடர்பான ஆவணங்களை தமிழ்நாடு அரசு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி இருந்தது. 

இந்த ஆவணங்களின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் 10 உறுப்பினர்கள் நியமனம் செய்வது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக அரசுக்கு சில விளக்கம் கேட்டு கடிதம் எழுதி இருந்தார்.

குறிப்பாக டி.என்.பி.எஸ்.சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளுக்கு யாரெல்லாம் விண்ணப்பித்திருந்தார்கள்? எதன் அடிப்படையில் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது. இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு பதிலளித்து இன்று மீண்டும் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு பதில் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் அந்த பதில் கடிதத்தில் சைலேந்திரபாபுவை டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமனம் செய்ய வேண்டும் என தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தி உள்ளது. மேலும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு குழு உறுப்பினர்கள் 4 பேர் நியமனம் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 

தமிழக ஆளுநர் டி.என்.பி.எஸ்.சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு தமிழக அரசு தற்போது பதில் அளித்துள்ளதால் கூடிய விரைவில் டி.என்.பி.எஸ்.சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தற்போது 61 வயதாவதால் டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமிக்கப்பட்டால் அடுத்த ஓராண்டில் அவர் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதன் காரணமாக மீண்டும் டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதவி காலியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழக அரசின் விளக்கத்தின் மீது ஆளுநர் இன்று அல்லது நாளைக்குள் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt explained to GovernorRavi on TNPSC chairman selection


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->