தலா 5000 ரூபாய்! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி அரசாணை! - Seithipunal
Seithipunal


கடந்த 2021 ஆம் ஆண்டு சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, பொன்னான நேரத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து உதவிபுரியும் நபர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கும் திட்டத்தை மத்தியசாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அவசரகால உதவியை பொதுமக்கள் செய்ய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தத்திட்டத்தின் மூலம் ஓர் ஆண்டில் அதிகபட்சம் 5 முறை ஒருவருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் தமிழகத்திலும் அப்போதே அமலுக்கு வந்தது. 

இந்த திட்டத்தில் தமிழக அரசும் தனது பங்காக 5000 ரூபாய் சேர்த்து, சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்று, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். 

இந்நிலையில், அதற்கான அரசனை இன்று தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

சாலை விபத்து நடந்த பின், அந்த இடத்தை காவல் துறையினர் பார்வையிட்டு, விபத்தின் தன்மை குறித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவிப்பார்கள். இதனை மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் இயங்கும் ‘மாவட்ட அளவிலான மதிப்பீட்டு குழு’ ஆய்வு செய்து, தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

ஒரு விபத்தில் காயமடைந்த நபரின் உயிரை பலர் காப்பற்றி இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தலா 5000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt order For Road Accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->