மகளிருக்கான ரூ.1,000 திட்டம்.. ஆட்சியர்கள் "சிறப்பு முகாம்" நடத்த உத்தரவு.. தமிழக அரசு அதிரடி.!! - Seithipunal
Seithipunal


மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர் தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறக்கூடிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் "அண்ணா பிறந்தநாள் தினமான செப்டம்பர் 15ம் தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யாரும் விடுபடாமல் இருக்க ரேஷன் கடை அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தி பயனர்களை சேர்க்க வேண்டும். இந்த திட்டத்தில் மூலம் பயன்பெற தகுதியான ஒருவர் கூட விடுபடாமல் செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமார் 1 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என இந்த ஆலோசனைக் கூட்டத்தின் தொடக்கத்தில் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, மகளிர் உரிமைத் தொகை திட்ட சிறப்பு அதிகாரி இளம்பகவத் உள்ளிட்ட பல்வேறு துறை செயலாளர்கள், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, ஏவா வேலு கே.என் நேரு உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt ordered Rs1000 scheme without leaving single person


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->