தமிழக எம்பி, எம்எல்ஏக்கள் மீது 561 வழக்குகள் - அதிரவைத்த தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் 561 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக சிறப்பு நீதிமன்றங்களில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விசாரணை கண்காணிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது.

அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது. கடந்தமுறை இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழகம் முழுவதும் உள்ள எம்பி மற்றும் எம்எல்ஏக்களில் மீதான வழக்குகளின் விவரங்கள், விசாரணை நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், தமிழகத்தில் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் 561 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது" என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து உயர்நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக உள்ள வழக்குகளை, விரைந்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும் புலன் விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணை வருகின்ற ஜூன் 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt report say TN MP MLAs bending 561 case


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->