#BREAKING :: ரொம்ப சீரியஸ்; 144பேருக்கு சிகிச்சை... 5வது நாள் உண்ணாவிரதம்; கூடுதல் ஆம்புலன்ஸ் வழங்க கோரிக்கை..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் 5 ஆவது நாளாகத் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள் டி.பி.ஐ வளாகத்தில் கடந்த டிசம்பர் 27ம் தேதி தொடங்கிய தொடர் உண்ணாவிரத போராட்டம் 5 வது நாளாக தொடர்கிறது.

இதுவரை 144 இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். பள்ளிக்கல்வி துறையின் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதனால் தொடர் உண்ணாவிரத போராட்டம்  நடந்து வருகிறது. சம ஊதியம் எப்போது வழங்கப்படும் என தமிழக அரசு உறுதியாக அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். சில ஆசிரியர்கள் கை குழந்தையுடன் உடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பல ஆசிரியர்களுக்கு உடல் நலக்குறைவு பாதிக்கப்படுவதால் கூடுதலான ஆம்புலன்ஸ் வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TnGovt teachers demand additional ambulance for hunger protest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->