விநாயகர் சிலைகள் கரைக்க 6 நிபந்தனைகள்! தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


வரும் செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் விநாயகர் சிலையை கரைப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் "நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்கமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே பொதுமக்களுக்கு கீழ்கண்டவாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

1. களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருளால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

2. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், தெர்மாகோல் போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் சிலைகளை பளபளவென மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசினை பயன்படுத்தலாம். 

3. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர்நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். 

4.சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம்/எண்ணெய் வண்ண பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை ரசாயனத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ண பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்குகந்த நீர் சார்ந்த / மகக்கூடிய / நச்சு கலப்பற்றை இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

5. சிலைகளை அழகுப்படுத்த வண்ண பூச்சிகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

6. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். 

விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச் சூழலை பாதிக்காதவாறு கொண்டாடப்படும் படி மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட ஆட்சியர் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை மேலும் விவரங்களுக்கு அணுகலாம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPCB imposed 6 conditions for dissolving Ganesha idols


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->