வெள்ள நீரில் எண்ணெய் கழிவு.!! இதுதான் காரணம்.!! வெளியான பரபரப்பு அறிக்கை.!!
TNPCB reports CPLC responsible for mixing oil waste in flood water
சென்னை எண்ணூர் கழிமுக பகுதியில் எண்ணெய் கழிவுகள் கசிந்ததற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னையில் ஏற்பட்ட பெரும்பள்ளம் காரணமாக எண்ணூர் பகுதியில் வெள்ள நீருடன் எண்ணெய் கழிவு கசிந்ததாக செய்திகள் வெளியானது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சை கிளப்பிய நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் எண்ணெய் கழிவு தொடர்பான விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேற்று நேரில் சென்று எண்ணூர் கழிமுக பகுதி, முக துவாரம், எண்ணெய் கழிவு படிந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் தனது அறிக்கையை இன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட குழு மேற்கொண்ட ஆய்வின் முடிவில் சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவு கசிந்ததற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம் எனவும், சிபிசிஎல் வளாகத்தில் போதுமான மழைநீர் வடிகால் மேலாண்மை இல்லாததே காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சிபிசிஎல் நிறுவனத்திற்கு சில வழிகாட்டுதலையும் மாசு கட்டுப்பாடு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
TNPCB reports CPLC responsible for mixing oil waste in flood water