மகிழ்ச்சியில் தேர்வர்கள் - டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட முக்கிய தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் அரசு துறைகளில் இருக்கும் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் 9-ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் குரூப் 4 காலிப்பணியிடங்களில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டது. இதனால் மொத்தம் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 6,724 உயர்ந்துள்ளது.

இதற்கிடையே கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி கூடுதலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தமிழகத்தில் அரசு துறைகளில் 75,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றுத் தெரிவித்தார். 

அதன் அடிப்படையில், குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10 ஆயிரம் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெறும் 480 காலிப்பணியிடங்கள் மட்டுமே அதிகரிக்கப்பட்டது. 

இதனால் தேர்வர்கள் சற்று வருத்தம் அடைந்தனர். இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குரூப் 4 பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tnpsc extend job vacancy


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->