தமிழகம் முழுவதும் நாளை குரூப் IV தேர்வு - முக்கிய அறிவிப்பு வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி.! - Seithipunal
Seithipunal


"தமிழகம் முழுவதும் நாளை குரூப் IV- தேர்வு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்வு எழுதும் தேர்வர்களுக்கான முக்கிய அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, "விண்ணப்பதாரர்கள் காலை 8.30 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டு உடன் வருகைப்புரிய வேண்டும்.

காலை 09.00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், 12.45 மணிக்கு தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதி கிடையாது. விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இரு இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு உடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும்.

தவறினால் அவர்கள் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன் மற்றும் மின்னணு கடிகாரம், புளூடூத் போன்ற மின்னணு உபயோகப் பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை. 09.06.2024 முகூர்த்த தினம் என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்க வாய்ப்புள்ளதால், தேர்வர்கள் தேர்வுக் கூடத்திற்கு 1 மணிநேரம் முன்னதாக செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வு கூடத்திற்குள் அல்லது வெளியே விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடும் பட்சத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், தேர்வாணையத்தால் தக்கதென கருதப்படும் காலம் வரையில் தேர்வு எழுதுவதிலிருந்து தேர்வர்கள் விலக்கி வைக்கப்படுவர். தேர்வர்கள் தங்கள் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டு வர வேண்டும்‌" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tnpsc restriction announce


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->