உணவகங்களில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு தனி அறை ஒதுக்க கூடாது - போக்குவரத்துக்கழகம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பயணிகள் உள்ளிட்டோர் இளைப்பாறுவதற்கு வசதியாக வழியில் ஏதாவது ஒரு உணவகத்தில் பேருந்தை நிறுத்துவது வழக்கம். 

அப்போது, அந்த உணவகங்களில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் சாப்பிடுவதற்கு தனியாக ஒரு இடம் உள்ளது. அங்கு தான் அவர்கள் சாப்பிடுவார்கள். அவர்களுக்கு சிறப்பான சாப்பாடு கிடைக்கும். 

அதே போல், சில உணவகங்களில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் சாப்பிட்டதற்கு பணம் வாங்கமாட்டார்கள். ஆனால், பயணிகளுக்கு வழங்கும் உணவின் விலை சற்று அதிகமாக இருக்கும்.

இது தொடர்பாக போக்குவரத்து கழகத்திற்கு பல்வேறு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அதன் படி, அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அனைத்து பயண வழி உணவக உரிமையாளர்களுக்கும் உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார்.

அதில் அவர், தெரிவித்துள்ளதாவது:- "உணவகங்களில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தனி அரை எதுவும் ஒதுக்க கூடாது. பயணிகளுக்கு உணவு பரிமாறப்படும் பொது அறையிலேயே அவர்களுக்கும் உணவு வழங்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNSTC order govt bus driver and conductor private room not arrange in restaurant


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->