ஈரோடு: வேனில் கடத்திய 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் சரக்கு வேனில் கடத்திய 400 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு போலீசார் நசியானூர் அடுத்த கந்தம்பாளையம் பிரிவு பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை போலீசார் நிறுத்தம் முயன்ற போது ஓட்டுநர் வேலை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார்.

இதையடுத்து வேகமாக சென்ற சரக்கு வாகனம் மற்றொரு வாகனத்தில் மோதியது. இதைத்தொடர்ந்து சரக்கு வாகனத்தில் இருந்த இரண்டு பேரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து போலீசார் சந்தேகம் அடைந்து வானில் சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் போலீசார் ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 400 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வேனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tobacco products seized in erode


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->