bsp தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய வழக்கு - இன்று விசாரணை.! - Seithipunal
Seithipunal


சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலதலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தற்போது இவரது உடல் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சியினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி வழக்கறிஞர் பொற்கொடி தரப்பில் ஆம்ஸ்ட்ராங் உடலை அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு தொடர்பாக மாநகராட்சி ஆணையர், எந்த பதிலும் அளிக்கவில்லை. 

இதையடுத்து, இந்த கோரிக்கை தொடர்பாக அவசரமாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பொற்கொடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது.

அதன்படி, இந்த மனுவை தனி நீதிபதி ஒருவர் விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு காணொலி மூலம் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.

இந்த வழக்கை விசாரிக்கும் தனி நீதிபதி யார்? என்பதை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் முடிவு செய்து அறிவிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today hearing bsp leader amstrong body bury in party office case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->