தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையில் கடந்த சில காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.

இது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யபட்டுள்ளது. இந்த மனுக்கள் கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், ஆளுநரின் குறுக்கீடு தொடர்பான கூடுதல் விவரங்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஆளுநர் விவகாரத்தை விசாரிக்கும் போது சேர்த்து விசாரிக்குமாறு வலியுறுத்தினர்.

அப்போது நீதிமன்றத்தில் இருந்த மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் வெங்கடரமணி, இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனால், நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும், ஒரு வாரத்தில் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும், இல்லை என்றால் தாங்களே இதற்கு தீர்வு காண முயற்சி செய்வோம் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. இதற்கிடையே தமிழக அரசு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது, துணை வேந்தர் நியமனத்தில் குறுக்கீடு செய்வது குறித்து 2 வழக்குகளை தாக்கல் செய்து இருந்தது. இந்த நிலையில் இன்று இரண்டு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today hearing of tamilnadu government against case in supreme court


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->