செந்தில் பாலாஜிக்கு சாதகமாக அமையுமா தீர்ப்பு? - உச்ச நீதிமன்றம் எடுக்க போகும் முடிவு என்ன?
today hearing senthil balaji bail issue in supreme court
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறையும் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வருகிறது. இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நேற்று முன் தினம் நடைபெற்றது.
அப்போது அமலாக்கத்துறையிடம் உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், பணமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்க இருக்கிறது. இதனால் செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
today hearing senthil balaji bail issue in supreme court