இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்த மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம்.! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக, தமிழகத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today heavy rain in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->