தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு.!
Tomorrow tasmac wineshop closed
தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 17-ம் தேதி முதல் 19ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தேர்தல் பொது விடுமுறையையொட்டி மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமலே இருந்தது. இதனால் தேர்தல் களத்தில் சண்டை சச்சரவுகள் இன்றி சுமுகமாக நடந்து முடிந்தது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளான நாளையும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதி மற்றும் அதன் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மதுக்கூடம் மற்றும் மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
Tomorrow tasmac wineshop closed