டோங்கோ எரிமலை வெடிப்பு : சென்னையில் அதிர்ந்த பூமி - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்.!
Tonga undersea volcano effect chennai
பசுபிக் கடலில் அமைந்துள்ள டோங்காவின் கடலுக்கு அடியில் இருந்த எரிமலை சீற்றத்துடன் வெடித்து சிதறியது. இதனையடுத்து கடலில் சுனாமி அலைகள் உருவாகி உள்ளன. இதன் காரணமாக டோங்கா நாடு முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நேற்று பசுபிக் கடலில் எரிமலை வெடித்ததால் 'டோங்கா' நாட்டுக்கு விடுக்கப்பட்டு இருந்த சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மிகப்பெரிய சுனாமி அலைகள் அந்நாட்டின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து செல்வது போன்ற வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னையில் உள்ள காற்றழுத்தமானிகளில், டோங்கோ எரிமலை வெடிப்பின் அதிர்வலைகள் பதிவாகி உள்ளது என்று, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தகவல் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு 8.15 மணிக்கு பதிவான இந்த அதிர்வலையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தகவல் தெரிவித்துள்ளார்.
English Summary
Tonga undersea volcano effect chennai