150 ஆண்டுகளுக்கு பிறகு நாளை "முழு சூரிய கிரகணம்"... பார்ப்பதற்கு அரிய வாய்ப்பு...!
Total solar eclipse tomorrow after 150 years
சூரிய கிரகணம் என்பது பூமிக்கும், சூரியனுக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும்போது ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வாகும். வழக்கமாக கங்கன சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் ஆகியவை அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் பூரண சூரிய கிரகணம் நாளை ஆஸ்திரேலியாவில் நிகழ்கிறது.
இந்த முழு சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு, நாளை கொடைக்கானல் வானியியற்பியல் மையத்தில், நேரடி ஒளிபரப்பு செய்யவும், கிரகணம் குறித்து விளக்கம் அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த அரிய நிகழ்வை காண காலை 7:30 மணியிலிருந்து 9:00 மணி வரை வரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும் 2172ல் தான் அடுத்த முழு சூரிய கிரகணம் வரும் என்பதால், இதை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு முதன்மை விஞ்ஞானி எபினேசர் தெரிவித்துள்ளார்.
English Summary
Total solar eclipse tomorrow after 150 years