ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் உஷார்.. 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.! - Seithipunal
Seithipunal


ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில்தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மிகவும் பிரசத்தி பெற்ற ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான  சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றார். இங்கு  வரும்  சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பை, பாட்டில்கள் போன்றவற்றை எடுத்து செல்ல வனத்துறை ஏற்கனவே தடை விதித்து உள்ளது. அதையும் மீறி பிளாஸ்டிக் பை, பாட்டில்கள் போன்றவற்றை எடுத்து வரும் சுற்றுலா பயணிகள்  சோதனை செய்து அந்த பிளாஸ்டிக் பொருட்களை வனத்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். 

இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெட் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களை நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம்  தடை மீறி வாகனங்களில் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,மேலும்  அது மட்டும் இல்லாமல் ஊட்டி கொடைக்கானல் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 28 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்துள்ளது, மேலும் குடிநீர் பாட்டில், பைகள் அடங்கிய பொருட்கள் அடங்கிய சுற்றுலா பைகளை வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்தலாம் என நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tourists on high alert in Ooty and Kodaikanal Ban on 28 types of plastic items


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->