திமுக எம்.பி., வழங்கிய நோட்டீஸ்! முக்கிய திருப்பமாக அமையுமா? சூடு பிடிக்கும் தமிழகத்தின் தலையாய பிரச்சனை!
TR Baalu Notice for Online Gambling
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே ஒரே புள்ளியில் ஒன்று படுகின்றன.
இதன் பலனாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து முந்தைய அதிமுக அரசு சட்டம் கொண்டு வந்தது. பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பொறுப்பேற்றபின், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு அரசு தரப்பில் போதிய விளக்கம் இல்லை என, கூறி, சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர், பாமக உள்ளிட்ட கட்சிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக, பல மாத கால தாமத்திற்குபின் முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு அளித்த அறிக்கையின்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் செய்து மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த மசோதா 4 மாதம் 11 நாட்கள் ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்த ஆளுநர், தமிழக அரசுக்கு தடை செய்ய அதிகாரம் இல்லை உள்ளிட்ட காரணங்களை கூறி. ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து, ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக, அமைச்சர் ரகுபதி தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சருக்கு திமுக எம்.பி., டி.ஆர்.பாலு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கவுள்ள நிலையில் டி.ஆர்.பாலு நோட்டீஸ் வழங்கியுள்ளார். இதில் கிடைக்கப்பெறும் தகவல், தமிழக அரசு சட்டம் இயற்ற முக்கிய திருப்பமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
TR Baalu Notice for Online Gambling