ஈரோட்டில் சேர்ந்த சோகம் : காதல் திருமணம் செய்த புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை! - Seithipunal
Seithipunal


ஈரோடு அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் இரண்டே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், கணபதிபாளையத்தைச் சேர்ந்த யுவராஜ் - மீனா ஆகியோர் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த  இரு மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் யுவராஜ் வீட்டில் மீனா வசித்து வந்த நிலையில், அவர் வியாழக்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மீனாவின் குடும்பத்தினர், உடலை வாங்க மறுத்து கணவர் யுவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து விசாரிக்கக் கோரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமணமாகி இரண்டே மாதத்தில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tragedy in Erode Newly married bride hangs herself


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->