விழுப்புரத்தில் திடீரென தடம் புரண்ட ரெயில்: 6 மணிநேர பரபரப்பு!
train derailed in vilupuram
விழுப்புரம் பகுதியில் இருந்து புதுச்சேரி சென்ற யூனிட் ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த ரெயிலில் மொத்தம் 8 பெட்டிகள் இருந்த நிலையில் 6-வது பெட்டி தண்டவாளத்தில் இருந்து இறங்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட பெட்டியை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ரெயில் விபத்து காரணமாக சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
பின்னர், 6 மணிநேரம் ரயில்வே ஊழியர்களின் கடுமையான முயற்சிக்கு பின் ரயில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
English Summary
train derailed in vilupuram