நடுவழியில் கழன்று ஓடிய எஞ்சின் - பயணிகளின் நிலை என்ன?  - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சென்றுகொண்டிருந்த பயணிகள் ரெயிலின் என்ஜின் தனியாக கழன்று சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி பயணிகள் ரெயில் சென்ற பயணிகள் விரைவு ரெயில் இன்று காலை சுமார் ஒன்பது மணியளவில் காட்பாடி அருகே சென்றுகொண்டிருந்தது. 

இந்த ரெயில் திடீரென முகுந்தராயபுரம் - திருவலம் இடையே ரெயில் என்ஜின் மற்றும் ரெயில் பெட்டிகளுக்கு இடையிலான கப்லிங் திடீரென கழன்றது. இதனால், ரெயிலின் என்ஜின் மட்டும் தனியாக கழன்று சென்றது. 

இதனால், பயணிகளுடன் ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் நிற்கின்றன. பிரிந்து சென்ற என்ஜினை மீண்டும் பின்னோக்கி கொண்டு வர ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரெயில் பெட்டிகள் தனியாக நின்றுள்ளது. சீரமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மற்ற ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தால் அந்த பகுதியில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

train engine went off from box in katpadi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->