ரயில் பயணிகளே.. உஷார்.! மயக்க பிஸ்கட் கொடுத்து.. குறிவைத்து கொள்ளையடிக்கும் வட மாநில கும்பல்.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி திருப்பூர் குமரன் சிலைக்கு அருகில் சவுதப் சவுத்ரி என்ற 26 வயது இளைஞர் மயங்கி கிடந்துள்ளார். இது குறித்து, போலீசார் விசாரணை நடத்திய போது வட மாநிலத்தைச் சேர்ந்த அவர் திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருவதாகவும், தான் கடந்த 16ஆம் தேதி ரயிலில் வரும்போது சிலர் பிஸ்கட் கொடுத்து மயக்கமடைந்தவுடன் தன்னிடம் இருந்த 2000 ரூபாய் பணம் மற்றும் அவரது செல்போனை கொண்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். 

அத்துடன், அவரது ஏடிஎம் கார்டையும் திருடிச்சென்று, அதிலிருந்து 27 ஆயிரம் பணத்தை அவர்கள் எடுத்தது தெரியவந்துள்ளது. இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை கொண்டு போலீசார் துப்பு துலக்கியதில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் ஐந்து பேருமே உறவினர்களாம். திருப்பூரில் இவர்கள் பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணிபுரிந்து வந்துள்ளனர். பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு இப்படி மயக்க மருந்து கொடுத்து வட மாநிலத்தவர்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளனர். மேலும், பீகாரில் இருக்கும் மெடிக்கலில் அதிக விலை கொடுத்து தூக்க மாத்திரைகளை கொண்டு வந்து திருப்பூர் இருந்தவாறு இந்த கொள்ளையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் ஐந்து பேருமே கடந்த நான்கு மாதங்களாக ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் பேச்சு கொடுத்து நண்பரை போல பழகி மயக்க மருந்து பிஸ்கட்டை கொடுத்து பணம் பறித்துள்ளனர். திருப்பூர் பகுதியில் பணியாற்றும் வட மாநிலத்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்லும்போது அதிக அளவு பணத்தை கொண்டு செல்வார்களாம். இதனால் அவர்களை குறி வைத்து இந்த கொள்ளையில் திருடர்கள் ஈடுபட்டுள்ளனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டுகள், மயக்க மாத்திரைகள், மயக்க மருந்து பொடிகள் மற்றும் பத்தாயிரம் பணம் முப்பது செல்போன்கள் உள்ளிட்டவை போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Train Robbery using anesthesia in Thirupur railway station


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->