திருப்பத்தூர் : ஆம்பூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி.?.. முக்கிய குற்றவாளி கைது.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வீரவர் கோயில் பகுதியை இன்று காலை மைசூர்-சென்னை இடையிலான காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த போது பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில் ஓட்டுநர் அடுத்த ரயில் நிலையமான பச்சை குப்பம் ரயில் நிலையத்தில் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தியுள்ளார்.

இதனையடுத்து ரயில் ஓட்டுனர் அளித்த தகவலின் பேரில் ஆம்பூர் கிராம காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் ரயில் தண்டவாளத்தை ஆய்வு செய்த போது ரயில் தண்டவாளத்தில் மிகப்பெரிய கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலை தவிர்க்கும் நோக்கத்தோடு தண்டவாளத்தில் கல் வைத்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஆம்பூர் அடுத்த பச்சை குப்பம் ரயில் நிலையம் அருகே நேற்று தண்டவாளத்தில் சிமெண்ட் வைக்கப்பட்ட விவகாரத்தில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மங்கள் பிரசாத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் வாலாஜாபாத் மனநல காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Train track distrub accused arrested in ambur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->