முதலமைச்சருக்கும், ஆருயிர் சகோதரர் உதயநிதிக்கும் மனமார்ந்த நன்றி - டி.ஆர்.பி.ராஜா ட்வீட்.!!
TRB raja thanks to cm mk stalin and minister uthaya nithi stalin
முதலமைச்சருக்கும், ஆருயிர் சகோதரர் உதயநிதிக்கும் மனமார்ந்த நன்றி - டி.ஆர்.பி.ராஜா ட்வீட்.!!
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் தேதி முதல்முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. அப்போது திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், சில அமைச்சர்களுக்கு துறைகளும் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும், திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளருமான டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதன் படி அவர் நாளை காலை 10.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சராக பொறுப்பு ஏற்கவுள்ளார். இதற்கிடையே டி.ஆர்.பி.ராஜா, தனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:- "என்னை வளர்த்து ஆளாக்கிய நவீன தமிழகத்தின் சிற்பி தலைவர் கலைஞர் அவர்களின் நினைவை போற்றி, தலைவர் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் ஆருயிர் சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்" என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
TRB raja thanks to cm mk stalin and minister uthaya nithi stalin