#திருச்சி | பேருந்தில் தனது தங்கையை புகைப்படம் எடுத்த இளைஞரை அடித்தே கொலை செய்த பாசக்கார அண்ணன் கைது! - Seithipunal
Seithipunal


திருச்சி அருகே பேருந்தில் பயணம் செய்த தனது தங்கையை புகை படம் எடுத்த இளைஞரை அடித்து, உதைத்து கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி : லால்குடி பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பணி முடித்துவிட்டு சத்திரம் பகுதியில் இருந்து தனியார் பேருந்து மூலம் லால்குடிக்கு திரும்பி வந்துள்ளார்.

அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த லூர்து ஜெயக்குமார் என்ற இளைஞர், அந்த பெண்ணை இளம் பெண்ணை புகைப்படம் எடுத்து கேலி, கிண்டல் செய்ததாக தெரிகிறது. 

உடனடியாக அந்த இளம் பெண் தனது அண்ணன் குப்புசாமிக்கு நடந்த சம்பவங்களை போன் மூலம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கேப்ரியல் புறம் பேருந்து நிலையத்தில் தனது நண்பர்களுடன் வந்த குப்புசாமி, பேருந்தில் இருந்து இறங்கிய லூர்து ஜெயக்குமாரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதில் படுகாயம் அடைந்த லூர்து ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குப்புசாமி கைது செய்து சிறையில் நடத்தினர். 

மேலும் தலைமறைவாகிய குப்புசாமி நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy lalkudi Kuppusami arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->