ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா - ரங்கா ரங்கா கோஷத்துடன் வந்த தேர்.!
trichy sri rangam chithirai chariot
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 28.04.2024 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளையில் நம்பெருமாள், கற்பக விருட்ச வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், யானை வாகனம், தங்கக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இதனை தொடர்ந்து இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று நடைபெற்ற சித்திரை தேரோட்டத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். அப்போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா ரெங்கா என்று கோஷமிட்டபடி, பக்தி பரவசத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்த இந்தத் தேரோட்டத்தை காணவரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோல், ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டத்திற்காக திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
English Summary
trichy sri rangam chithirai chariot