திருச்சி டூ மும்பை: நேரடி விமானம் இயக்க திட்டம்!  - Seithipunal
Seithipunal


திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

மலிந்தோ ஏர் ஏசியா, இண்டிகோ, இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விமானங்கள் இந்த நிலையங்களில் இயக்கப்பட்டு வருகிறது. 

இதேபோல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை, புது டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவைகளாக விமானங்கள் இயக்கப்படுகிறது. 

இண்டிகோ நிறுவனம்  சேவையை இயக்கி வருகிறது. திருச்சியில் இருந்து தினந்தோறும் 7 உள்நாட்டு விமான சேவைகள், 11 வெளிநாட்டு விமான சேவைகள் மேற்கொள்ளப்படுகிறது. 

இந்நிலையில் அடுத்த மாதம் 2 ஆம் தேதி முதல் வியட்நாமிற்கு வியட் ஜெட் நிறுவனம் புதிய விமான சேவையை தொடங்க உள்ளது. 

அதுபோல் திருச்சியில் இருந்து மும்பைக்கு அடுத்த மாதம் 4 ஆம் தேதி முதல் தினசரி விமான சேவை இயக்கப்பட உள்ளது. மும்பையில் இருந்து இந்த விமானம் மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2:55 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடையும். 

திருச்சியில் இருந்து மீண்டும் மதியம் 3.50 மணிக்கு புறப்பட்டு மாலை 4:40 மணிக்கு மும்பை சென்றடையும் என இண்டிகோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy to Mumbai direct flight


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->