திருப்பூரை பரபரப்பாக்கிய இந்து முன்னணியினர்! தட்டி தூக்கிய போலீசார்!  - Seithipunal
Seithipunal


திருப்பூரில் கோவில் சொத்துகளை பாதுகாக்க வலியுறுத்தி, இந்த முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி முன்னணியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் 50,000 மேற்பட்ட கோவில்கள் இந்து சமய அறநிலை துறையின் கீழ் இயங்கி வருகின்றன. இந்த கோவில்களுக்கு பல லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது.

மேலும் இந்த கோவில்களின் வருமானம், உண்டியல் வருமானம், மற்ற வகைகளில் வருகின்ற வருமானம் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க, பராமரிக்க தமிழக அரசால் இந்த இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில், திருப்பூர் பகுதியில் இந்து கோவில்களின் சொத்துக்களை அபகரித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம், சமத்துவபுரம், சமூக நலத்துறைக்கு என தமிழக அரசு எடுத்துள்ளதாக, இந்து முன்னணி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

மேலும் இந்த கோவில் சொத்துகளுக்கு உரிய இழப்பீடு, வாடகையோ தரவில்லை என்றும், இந்து கோவில்களின் சொத்துக்களை அரசு திட்டமிட்டு சூறையாடி வருவதாகவும் இந்து முன்னணி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த கோவில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி, பக்தர்களை ஒருங்கிணைத்து, இன்று தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. 

இதில் திருப்பூர் பகுதியில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் திருப்பூரில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trippur Hindu Munnani protest


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->