#தமிழகம் || அடித்தே கொலை செய்யப்பட்ட தாய், இரு மகன்கள்.! தப்பியோடிய அந்த நபர் யார்? போலீஸ் விசாரணை.!
tripur mother and two sons murder
திருப்பூர் அருகே பெண் ஒருவரையும், அவரின் இரண்டு மகன்களையும் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், சேடர்பாளையம் பகுதியில் ஒருவர், அவரின் 2 மகன்கள் என மூன்று பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீசார் தரப்பில் இருந்து வெளியான தகவலின் படி, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துமாரி (கணவனை பிரிந்தவர்) என்பவர், கடந்த 15 தினங்களுக்கு முன்பு திருப்பூர், சேடர்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனது 9 வயது மற்றும் 6 வயது வயதுடைய இரண்டு மகன்களுடன், ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆண் நண்பர் ஒருவர் ஒருவருடன் குடி எறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை வீட்டிற்கு வந்த அந்த ஆண் நண்பருக்கும், முத்துமாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், சிறிது நேரத்தில் அந்த ஆண் நண்பர் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிகிறது.
வீட்டின் உரிமையாளர் வீட்டில் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, முத்துமாரி அவரின் இரண்டு மகன்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்து உள்ளனர். இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூன்று பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் மாநகரக்காவல் ஆணையர் விசாரணை நடத்தினார். மேலும் தலைமறைவாக உள்ள முத்துமாரியின் ஆண் நண்பர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
tripur mother and two sons murder