அநாகரீகத்தின் உச்சம்! இருதரப்பையும் விடாதீங்க - முதல்வருக்கு டிடிவி தினகரன் கோரிக்கை! - Seithipunal
Seithipunal


அரசு நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் - எம்.பி ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை சமாதானம் செய்ய முயன்ற மாவட்ட ஆட்சியர் தள்ளிவிடப்பட்ட சம்பவம் அநாகரீகத்தின் உச்சம் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுஇக்குறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இராமநாதபுரம் தனியார் பள்ளியில் நடைபெற்ற அரசு நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் ராஜகண்ணப்பன் - இந்திய முஸ்லீம் கட்சி எம்.பி நவாஸ் கனி ஆகியோரின் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவர்களை சமாதானம் செய்ய முயன்ற மாவட்ட ஆட்சியர் தள்ளிவிடப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் பொது இடத்தில் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழவேண்டுமே தவிர, அவர்களது ஆதரவாளர்களைக் கொண்டு அநாகரிகமாக நடந்து கொள்வது நல்லதல்ல.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய இருதரப்பினரின் ஆதரவாளர்கள் மீதும் குற்ற வழக்கு பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்.

அரசு விழாக்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அமைச்சர்கள் சிலர் அநாகரிகமாக நடந்து கொண்ட நிலையில் இப்போது நடந்திருப்பது அநாகரீகத்தின் உச்சமாகும். இனியும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Condemn Ramanadhapuram incident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->