பாமகவினர் மீது வழக்கா? திமுக அரசின் ஜனநாயக விரோதப் போக்கு - டிடிவி தினகரன் கண்டனம்! - Seithipunal
Seithipunal


மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள திமுக அரசின் ஜனநாயக விரோதப் போக்கு கடும் கண்டத்திற்குரியது என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் கண்டனச் செய்தியில், தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அறவழியில் போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்கள் உட்பட அக்கட்சியினர் பலர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையவோ, பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்கள் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் மருத்துவர் திரு.அன்புமணி ராமதாஸ் உட்பட அக்கட்சியினர் பலர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என காவல்துறையையும், தமிழக அரசையும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran condemn to DMK Govt For PMK against police case ElectricityBill AnbumaniRamadoss 


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->