விடாதீங்க முதல்வரே! ஒழிச்சிடுங்க - ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் வைத்த அவசர கோரிக்கை! - Seithipunal
Seithipunal


விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு சீர்குலைக்கும் சீமைக் கருவேல மரங்களை  தனிக்குழு அமைத்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, அமமுக தலைவர் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "விவசாயத்திற்காக மழையை மட்டுமே நம்பியிருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் அடர்ந்து வளர்ந்திருக்கும் சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மழைநீரை குளம், கண்மாய் போன்றவற்றில் சேமித்து வைத்தாலும் சீமைக் கருவேல மரங்களின் வேர்களால் உறிஞ்சப்படுவதால் மழைநீரையும் சேமிக்க முடியாத சூழலில் சிக்கி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

பணம் கொடுத்து குடிநீரை வாங்க வேண்டிய அளவுக்கு வறட்சி நிலவ முக்கிய காரணமான சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையில் அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு சீர்குலைக்கும் சீமைக் கருவேல மரங்களை  தனிக்குழு அமைத்து முற்றிலுமாக அகற்றி விவசாயம் செழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran request for Ramanadhapuram Farmers issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->