காலத்தின் கட்டாயம் நான் அரசியலில் இருக்கிறேன் - டிடிவி தினகரன் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


தேனி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் போது, செய்தியாளர்களிடம் பேசினார். அதாவது, “நான் உங்கள் அளவிற்கு பெரிய அரசியல் அறிஞர் இல்லை. 

எனது தந்தை கொண்டு வந்து விட்டார், காலத்தின் கட்டாயம், நான் அரசியலில் இருக்கிறேன். விஜய் ஒரு சூப்பர் ஸ்டார். ரஜினிக்கு பிறகு விஜய், அஜித் இருவரும் "டாப்" ஆக இருக்கின்றனர். விஜய் கட்சி துவக்கியுள்ளார். இதை யார் முடிவு பண்ண வேண்டும், மக்கள் என்ற எஜமானர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

 

நான், நீங்கள் சொல்வது போல் நடக்கப்போகிறதா? உங்கள் எதிர்பார்ப்பும் எனது எதிர்பார்ப்பும் நடக்க போகிறதா? மக்கள் என்ன சொல்கிறாரோ, அதன்படிதான் நடக்கப்போகிறது. மக்கள் முடிவு செய்யட்டும். நாம் ஏன் மண்டைய உடைக்க வேண்டும். 

எங்களுடைய விருப்பம், எங்களுடைய நம்பிக்கை எல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணி 2026ல் தமிழகத்தில் ஆட்சியமைத்து ஒரு சிறந்த ஊழலற்ற மக்களாட்சியை கொடுக்கும் என்பது மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran election campaighn in theni


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->