ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஓபிஎஸ் கருத்தை ஆதரிப்பார்கள் - டிடிவி டிவிட்..! - Seithipunal
Seithipunal


ஓ. பன்னீர்செல்வத்தின் கருத்தை ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள எவரும் ஆதரிப்பர் என தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் ஓ. பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக ஒன்றாக செயல்பட சின்னமாவும் தினகரனும் அதிமுகவில் இணைய வேண்டும் என தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து, டிடிவி தினகரன் ஓ.பி. எஸ் கருத்தித்துக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

 

தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற திரு.O.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள்.

அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே என அவர் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV Twitter Post about OPS Staement


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->