அதிகரிக்கும் முட்டை கடத்தல்; தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரம்..!
Egg smuggling on the rise in the United States
அமெரிக்கா தனது அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து முட்டைகளை கடத்திச் செல்வது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பறவைக்காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக, அமெரிக்காவில் கோழி முட்டை விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்ட விரோத குடியேற்றம் மட்டுமின்றி, முட்டை கடத்தல் தடுக்கவும் அமெரிக்கா தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவுக்கும், மெக்சிகோவுக்கு நீண்ட எல்லை இருக்கிறது. இதன் வழியாக, அமெரிக்க எல்லைக்குள் பல்வகையான பொருட்கள் சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்படுகின்றன. இவற்றில் சமீப காலமாக கோழி முட்டை கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.
பறவைக்காய்ச்சல் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக முட்டை கொண்டு வருவதை அமெரிக்கா தடை செய்துள்ளதோடு, உள்நாட்டிலும் முட்டை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மெக்சிகோவில் குறைந்த விலையில் முட்டை வாங்கி, அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக கொண்டு செல்கின்றனர்.

இதன் காரணமாக, முந்தைய ஆண்டை காட்டிலும், இந்தாண்டு அமெரிக்க சுங்கச்சாவடிகளில் முட்டை பிடிபடுவது 29 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், நுகர்வோர் மலிவான மாற்று வழிகளைத் தேடுவதால், நாட்டிற்குள் முட்டைகளை கடத்தும் முயற்சிகள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் ஒரு டஜன் முட்டைகள் 02 டாலர் என்ற விலையில் இருந்த நிலையில், ஓராண்டு இடைவெளியில் 08 டாலர்களாக அதிகரித்துள்ளதாக, அமெரிக்க நுகர்வோர் வருத்தப்படுகின்றனர்.
English Summary
Egg smuggling on the rise in the United States