300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை படிமம்; செய்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பு..!
3 billion year old beach fossil discovered on Mars
பூமிக்கு அடுத்தபடியாக இருப்பது செவ்வாய் கிரகம். இந்த செவ்வாய் கிரகத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு கியூரியா சிட்டி விண்கலத்தை இறக்கி அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா ஆய்வு மேற்கொண்டது.
அந்த ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய கரிமப் பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அத்துடன், அடுத்த 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் நாசாவால் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன.

மேலும், இந்த செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், அங்கு பூமத்திய ரேகைக்கு அடியில் தூசி நிறைந்த பனிக்கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்தது. அதனால், செவ்வாயில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஜூராங் ரோவர் கருவி, அங்கு 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை படிமங்களை இருப்பதை கண்டறிந்துள்ளது.

பூமிக்கு அடுத்தபடியாக செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான நீர், ஆக்சிஜன், மண் உள்ளிட்ட புவியியல் அமைப்புகள் இருக்கிறதா? என்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை படிமம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, தண்ணீர் இருப்பதை மேலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது. ஆனால், இந்த கடல் நீர் பூமியில் உள்ளது போன்று உப்புத்தன்மை கொண்டதா?, அல்லது தண்ணீர் போன்று சுவையானதா? என்பது உறுதி செய்யப்படவில்லை என்றும், தொடர்ந்து ஆய்வுகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
3 billion year old beach fossil discovered on Mars