பெரும் சோகம்! அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் மர்ம சாவு! காவல்துறை விசாரணை! - Seithipunal
Seithipunal


திருவாரூர் அரசு கல்லூரி விடுதியில் மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் கிராமத்தை சேர்ந்த சக்தி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி நான்காம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார். இந்த நிலையில் கல்லூரி விடுதியில் உள்ள அறையில் நள்ளிரவு தூங்கிக் கொண்டிருந்த மாணவர் காலையில் அறையை திறக்காததால் அவரது நண்பர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

நீண்ட நேரமாக அறையை தட்டி பார்த்து உள்ளனர். அந்த மாணவர் கதவை திறக்காததால் சக மாணவர்கள் இணைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சக்தி என்ற மாணவர் படுத்த படுக்கையிலே உயிர் இழந்து இருப்பதை  மாணவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக  விடுதி பொறுப்பாளரிடம் தகவல் கொடுத்துள்ளனர். விடுதி பொறுப்பாளர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் தெரிவித்துள்ளார்.தகவலின் பெரில் அங்கு வந்த திருவாரூர் போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவர் உயிரிழந்தது தொடர்பாக மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள்  திருவாரூர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாணவர் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாரா?  அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tudent dies mysteriously at Thiruvarur Government College Hostel


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->