தமிழகம்: 10ம் வகுப்பு மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியை பவித்ரா கைது! - Seithipunal
Seithipunal


சிவகாசி அருகே சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் பேரில், டியூஷன் ஆசிரியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகாசி சிவானந்தா பகுதியை சேர்ந்தவர் பவித்ரா. 24 வயதாகும் இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் ஜேசுராஜ் என்பவருக்கும் திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

பவித்ரா தனது வீட்டிலேயே அந்த பகுதி சிறுவர்களுக்கு டியூஷன் நடத்தி வந்துள்ளார். அப்போது டியூஷனுக்கு படிக்க வந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் உடன் ஆசிரியை பவித்ரா நெருக்கமாக பழகி, சிறுவனை ஆசை வார்த்தை பேசி, காதலிப்பதாகவும் கூறி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

இதற்கிடையே பவித்ரா மீதான மோகத்தால் அந்த சிறுவன் தேர்வுகளில் சரியாக தேர்ச்சியாகாமல் தோல்வியடைந்து, பள்ளி படிப்பை விட்டு விட்டு கூலி வேலைக்கும் சென்று வந்துள்ளார். 

இந்நிலையில், சிறுவனை அழைத்துக் கொண்டு ஆசிரியை பவித்ரா தலை மறைவானதாக தெரிகிறது. இதனை அடுத்து சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சிறுவனையும் ஆசிரியை பவித்ராவையும் தேடிப் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். 

பின்னர் சிறுவனை குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்த போலீசார், ஆசிரியை பவித்ரா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tution teacher school students Abused


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->