கஞ்சா வைத்திருந்த "த.வெ.க" நிர்வாகி.!! தட்டி தூக்கிய தூத்துக்குடி போலீஸ்.!!
Tvk executive arrested in ganja case
தமிழ் திரை உலகின் தளபதி எனப் போற்றப்படும் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தனது அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டிய நடிகர் விஜய் உறுப்பினர் சேர்க்கைக்கான தனி செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தற்போது வரை 70 லட்சம் உறுப்பினர்களுக்கு மேல் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஒருவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் இனிகோ நகரை சேர்ந்த பாஸ்கரன் என்ற சுறா பாஸ்கர் மீனவர் தொழில் செய்து வருகிறார்.
தூத்துக்குடியில் பீச் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் கஞ்சா பதிக்கு வைத்துள்ளதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் தென்பாக்கம் காவல் நிலையத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் ஆதர் ஜஸ்டின் சாமுவேல் ராஜ் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சுமார் 1.25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சுறா பாஸ்கரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Tvk executive arrested in ganja case