விஜய்யின் காரை மறைத்து மனு கொடுத்த நபர்கள் - நடந்தது என்ன?
tvk fans tried petition to leader vijay
தமிழக அரசியலில் புதிதாக தடம் பதித்த நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் படிப்படியாகக் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதுவரைக்கும் 95 மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து இன்று 6வது கட்டமாக இறுதிக் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை விஜய் வெளியிடுகிறார். இந்த நிலையில் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து பனையூர் கட்சி அலுவலகத்திற்கு தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது இருசக்கரவாகனத்தில் அங்கு வந்த தவெக தொண்டர்கள் பல ஆண்டுகாலம் நாங்கள் உழைத்திருக்கிறோம் எங்கள் தொகுதியை சேர்ந்தவர்களை தான் மாவட்ட செயலாளராக நியமிக்க வேண்டும் மற்றவர்களை நியமிக்க கூடாது என்று விஜய்யின் காரை பின் தொடர்ந்து மனுவை அளிக்க முயற்சித்தனர்.
உடனே காரின் ஓட்டுநர் அந்த மனுவை பெற்றுக்கொண்டுள்ளார். இருப்பினும் காரின் ஓட்டுநர் அந்த மனுவை பெற்றுக்கொண்ட நிலையிலும் விஜய்யிடம் மனுவை ஒப்படைக்க வேண்டும் என்று கூறி காரை பின் தொடர்ந்து சென்றனர்.
English Summary
tvk fans tried petition to leader vijay