ஈஸ்டர் பண்டிகை - த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து.!
tvk leader vijay easter wishes
உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு உயிர்த்தெழுந்த தினமான இன்று ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துவ மக்களின் விஷேசமான நாளான இன்று அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மற்றும் பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:-
"உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க, புனிதமான இந்நன்னாளில் அனைவருக்கும் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துக்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
English Summary
tvk leader vijay easter wishes