பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - மாணவர்களுக்கு தவெக தலைவர் வாழ்த்து.!
tvk leader vijay wish to 10th student for exam
நடப்புக் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை முதல் 15.04.2025 வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வினை 8,86,970 தேர்வர்களும், தனித்தேர்வர்கள் 25,841 மற்றும் சிறைவாசித் தேர்வர்கள் 273 என்று மொத்தம் 9,13,084 தேர்வர்கள் 4,113 தேர்வுமையங்களில் தேர்வு எழுதவுள்ளனர்.
இந்த நிலையில் பொதுத் தேர்வை எழுதும் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு வாழ்த்துகள் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்து இருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை தொடங்கும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத உள்ள அன்புத் தம்பிகளுக்கு, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உற்சாகத்தோடும், துணிவுடனும், தன்னம்பிக்கையுடனும் பொதுத்தேர்வினை எதிர்கொள்ளுங்கள்! வெற்றி நிச்சயம்! என்று தெரிவித்துள்ளார்.
English Summary
tvk leader vijay wish to 10th student for exam