அன்று சங்கி விஜய்! இன்று திராவிட உ.பி.! நன்றி தெரிவித்து பாராட்டி மகிழும் திமுகவினர்! ஒரு பார்வை! - Seithipunal
Seithipunal


இன்று நீட் தேர்வை ரத்து செய்ய கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக சட்டத்துறை சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

மேலும், நீட் முறைகேடு மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கல்வி விருது விழாவில் பேசிய நடிகர் விஜய், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு மாநில கல்விக்கு எதிரானது மற்றும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியிருந்தார். இது மட்டுமல்லாமல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றும் நடிகர் விஜய் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஆட்சி அமைத்த பிறகு, மத்திய அரசை தாழ்த்துவதாக நினைத்து கொண்டு ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு வருகிறது.

தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசின் அறிவிப்புகள், செய்திக்குறிப்புகள், திமுக தலைவர் மற்றும் திமுகவினர் அனைவருமே மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் இதனை ஒரு அஜெண்டாவாகவே திமுக முன்வைத்து, ஒன்றிய அரசு என்று சொல்லாதவர்களை பாஜகவின் சங்கி என்று பட்டம் கட்டவும், மத்திய அரசை ஒன்றிய அரசு என்பவர்களை தங்களுக்கு ஆதரவாளராக கருதும் நிலைக்கு வந்துவிட்டது. 

இதன் காரணமாகவே நடுநிலை கருதி காலம் காலமாக சொல்லப்படும் மத்திய அரசு என்ற வார்த்தையை செய்தி ஊடகங்கள் பயன்படுத்தி வருகிறது.

இப்படியான சூழ்நிலையில், நடிகர் விஜய் இன்று தனது உரையில் 9 முறை மத்திய அரக்கு பதிலாக "ஒன்றிய அரசு" என்று குறிப்பிட்டு, நீட் தேர்வு, தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தனது கருத்தை பேசியிருந்தார். இதனை வரவேற்றுள்ள திமுகவினர் மற்றும் திமுகவின் ஆதரவாளர்கள் நடிகர் விஜயை பாராட்டி புகழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

முன்னதாக நடந்த முதல்கட்ட கல்வி விருது விழாவில் உரையாற்றிய நடிகர் விஜய், மதுவுக்கு எதிராக எதிராகவும், போதைப் பழக்கத்திற்கு எதிராகவும் பேசியிருந்தார். மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசின் ஆட்சி நிர்வாகம் தோல்வி என்று குறிப்பிட்டிருந்தார். 

நடிகர் விஜயின் இந்த கருத்தை ஆதரித்த பாஜக மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் , ஆளும் திமுகவை கடுமையாக தாக்கி சமூக வலைத்தளங்களில் பேச, அதற்க்கு திமுக தொண்டர்கள் மற்றும் திமுகவின் ஆதரவாளர்கள் நடிகர் விஜய்யை பாஜக சங்கி என்று அழைத்து கடுமையாக விமர்சித்திருந்தனர். 

மேலும், நடிகர் விஜய் ஏன் நீட் தேர்வு குறித்து வாய் திறக்கவில்லை? மணிப்பூர் விவகாரம் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை? என்று கேள்வி எழுப்பி நடிகர் விஜய்யை பாஜக சங்கி என்று அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக, நடிகர் விஜய்யின் அரசியல் கொள்கை, அவர் யாரை எதிர்க்கிறார் என்று உறுதியாகும் வரை, அவருக்கு உ.பி - சங்கி போன்ற பட்டங்கள் திமுக - பாஜக or அதிமுக தரப்பிலிருந்து கொடுக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்பதே உண்மை. அதுவரை விஜய் ரசிகர்கள் திமுக, பாஜக, அதிமுக என மூன்று கட்சிகளையும் சமாளித்து ஆகவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதும் உண்மை. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Vijay BJP Sangi or DMK UPs


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->